அடநீங்களும் வாங்க

கார் ஓட்டுறவனுக்கு..,ஏர் ஓட்டத் தெரியாது,
ஏர் ஓட்டுறவனுக்கு கார் ஓட்டத் தெரியாது.. அப்படீனெல்லாம் எங்க ஊர்லே சொல்லுவாங்கன்னு.., நான் சொல்லப் போறேன்னு நீங்க நெனைச்சா..அது தப்பு..!

இப்ப இது மாதிரி பழமொழி இருக்குன்னும் அடிச்சு சொல்லமுடியாத காலம். அதாவது ஒருத்தருக்கு ஒரு துறையிலேதான் அனுபவம் இருக்குன்னு எந்த நாட்டாமையும் தீர்ப்பும் சொல்லமுடியாது. அப்படி சொன்னா அந்த நாட்டாமைக்கு அனுபவமில்லேன்னு ஆகிப் போயிடும்.

ஏர் ஓட்டிகிட்டு இருந்தவன்..ஊருக்கே சோறு போட்டுட்டு இருந்தவன்.. "அன்ன தாதா.."ன்னு கொண்டாடப் பட்டு வந்தவன்,வயலுக்கு பாய்ஞ்ச தண்ணியிலே சாயம் கலப்படமாகிப் போனதாலே பயிரெல்லாம் கெட்டுப் போய்,களமெல்லாம் பதராகிப் போச்சு.

கடன் தொல்லை கூடிபோய் .., ஒரு கட்டத்துலே தற்கொலைக்கும் முயற்சி பண்ணி வெஷத்துலே கலப்படமானதுலே தப்பிப் பொழைச்சு...,பொண்டாட்டி புள்ளைக முகம் பாத்து எப்படியாவது பொழைச்சுகிடலாமுன்னு, விவசாயம் செஞ்ச நெலத்தை,சாய ஆலைக்கு வித்துபோட்டு பட்டணத்துலே குடியேறுன நெலமை.. காலம் போற போக்குலே,இப்ப அவன் காரோட்டியாப் போய்ட்டான்.!

இப்படியொரு சொந்தக் கதையை ஒரு காரோட்டி எங்கிட்ட சொன்னபோது.., எனக்கும் "கருக் .." குன்னுதான் இருந்துச்சு. இப்படி எத்தனைபேரு எப்படியெப்படியெல்லாம் மாறிப் போனாங்களோ..!

மண்ணைப் பதப் படுத்துறதிலே துவங்கி, வெதை நெல்லை ஊனுர வரைக்கும் அவன் வேண்டாத தெய்வமில்லே..! போகாத கோயிலுமில்லே..! பாக்காத சங்கத் தலைவருமில்லே..! ஆனா இவன் நெனைச்சா மாதிரி எதுவும் நடக்கவே இல்லே..!

இப்படித் தப்பிப் பொழைச்சு வந்தவங் கதை இதுன்னா,இவனை மாதிரி செத்துப் போக முயற்சி பண்ணி ஒருத்தன் ,அரளிக் கொட்டையை அரைச்சு முளுங்குனதுலே ,அதிலே எதுவும் கலப்படம் இல்லேங்கிறதாலே..பாவம் செத்தே போனானாம்.! ஆதரவில்லாத பொண்டு புள்ளைக பொழப்பு இப்ப "நாறிக்கிட்டு கிடக்குதாம்.!"..

இப்படி மாறிப் போகனும்னு யாரும் திட்டம் போடலையின்னாலும்,காலம் அவங்களை தன்னோட சுழலுக்குள்ளே இழுத்துவிட்டு அதும் போக்குலே சுழட்டிவிடுதாம்.. இதுக்கெல்லாம் என்ன காரணம்..? எது காரணம்..? என்ன செஞ்சா இதெல்லாம் மாறும்..? அவன் எப்படி திருப்பியும் அன்ன தாதாவா மாறமுடியும்..? ஒருவேளை விதியா இருக்குமா..? இலே ஏதாவது சதியா இருக்குமா.?

ரோசனை பண்ணி பண்ணி மண்டைதான் காயுது..!.

ஆனா..அவனுக்கான நல்ல ரோசனையை நீங்க சொல்ல முடியும். அவனோட வாழ்கையை சொர்க்கமாக்கும் வழிமுறையை நீங்க காட்ட முடியும். நீங்க சொல்லப் போற வார்த்தைகள்,ஒருவேளை அவனோட வாழ்கையை மீட்டுத் தருகிற வேதமாகக் கூட மாறிப் போக வாய்ப்பு இருக்கு..!

அதனாலே நிறைய எழுதுங்க..! நல்ல ரோசனைக்கு -[ கவிதைக்கு ] - நலிஞ்சு போன இந்த சமூகத்தோட ஒரு சின்ன அங்கீகாரமா ஒரு பரிசும் இருக்கு . அது தொகையோட அளவுலே இல்லே.. ஒரு கௌரவத்தோட அடையாளமாத்தான் இருக்கும்..!
அதனாலே நீங்களும் கண்டிப்பா வாங்க..! நம்ம எல்லாருமா சேந்து ஏதாவது உருப்படியா சாதிப்போம்.

"" 2015-தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடாத்தப்படும் கவிதைப்போட்டி"

தலைப்புகள் -------
• சாதி ஒழி ! மதம் அழி! சாதி !
• நாளைய தமிழும் தமிழரும் !
• இப்படி நாம் காதலிப்போம் !

முதல் பரிசுகள் மூன்று - தலா 1500 ரூபாய்கள் - மொத்தம் ரூ.4500
இரண்டாம் பரிசுகள் மூன்று - தலா 1000 ரூபாய்கள் வீதம் - மொத்தம் ரூ.3000
மூன்றாம் பரிசுகள் மூன்று - தலா 500 ரூபாய்கள் வீதம் - மொத்தம் ரூ.1500

மேலுள்ளவாறு படைப்பாளிகள் ஒன்பது பேருக்கு ஒன்பதாயிரம் ரூபாய்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன !

இது தவிர மேலும் பத்து படைப்பாளிகளுக்கு ஆறுதல் பரிசாக பெறுமதியான நூல்கள் வழங்கப்பட தயார் செய்யப்பட்டுள்ளது !

இதன் அடிப்படையில் மொத்தம் பத்தொன்பது படைப்பாளிகளுக்கு ஊக்குவிப்புகள் காத்திருக்கின்றன !

அனைவரும் போட்டியில் பங்குகொள்ளுங்கள் ! போட்டி குறித்த பதிவுகளை எல்லோரும் பகிர்ந்துக் கொண்டு பலரையும் போட்டியில் பங்கேற்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் !
---------------
மேல் விபரங்களுக்கு - தோழர் கே. எஸ். கலை அவர்களின் ennam/15577- படைப்பை பாருங்கள்,நண்பர்கள்கிட்டே அவசியம் பகிருங்கள்..! மீண்டும் நாளை இன்னும் பேசுவோம்..!

அன்புடன்
பொள்ளாச்சி அபி

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (3-Jan-15, 10:06 pm)
பார்வை : 99

மேலே