ஒரு நாள் ரவுடி - சந்தோஷ்

நள்ளிரவு பண்ணிரெண்டு எட்டும் அரை மணி நேரத்திற்கு முன்பு....

சென்னை.. சோழிங்கநல்லூர் கடற்கரை.

துள்ளி குதித்து, கடல் சந்தமிசைக்கும் இந்த அலைகளுக்கு தமிழ் மொழி தெரிந்திருந்தால், இந்நேரம் என் மனதிலுள்ள ரணங்களுக்கு கவிதை மருந்து தெளித்திருக்கும். ஹம்ம்ம் என்ன செய்ய? தமிழ்., இந்த மனிதர்களிடம் சிக்கி பாடாய் படுகிறது. " ழ, ல, ள" இதில் எது தமிழ்-க்கு வரும் என்று கூட தெரியாத சிலர் கவிஞர் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள். ம்ம்ம் நான் மட்டும் என்ன யோக்கியமா ?

கடலின் அலையோடு என் கவனம் மாறுகிறது.. பின்பு சிதறுகிறது.

அடச்சே....! என்ன வாழ்க்கைடா இது....? வெறுத்தேபோச்சு. எதுவும் சரியில்ல. சில எவனும் சரியில்ல. சில எவளும் சரியில்ல. ஏன் நானே எனக்கு சரியில்ல. அது சரி..நான் ஏன் இந்த உலகம் கிழித்த கோட்டுக்குள் ஒழக்கமா இருக்கணும்.? நான் ஒழக்கமா இருந்தா மெரீனா பீச் ல சிலையா வைக்க போறானுங்க. எவனும் வைக்கமாட்டான். பொறாமைப்புடிச்ச உலகமிது.

நான் ஏன் ரவுடியா மாறக்கூடாது.? நான் ஏன் என் கோபத்தை அடக்கி வைக்கனும். கோபமா நான் எழுதி எழுதி பெரிசா என்னத்த கிழிச்சேன். ? என் எழுத்துல நாட்டுல எதாவது திருந்தியிருக்கா...? இனி நான் கோவப்படுவேன்.... நான் என்ன மயிருக்கு என் கோபத்தை விடணும் ....???


" அங்க என்ன சத்தம் ? "

"யாரு அவன்..அந்த பொண்ண ஏன் தொரத்திட்டு ஓடுறான் ?
"கற்பழிக்கப்போறானா ? ஆமா.. அந்த பொண்ணு பயந்து ஒடுறா.. காப்பாத்தணும்... காப்பாத்தாமா இத பார்த்து .. கவிதையா எழுத முடியும்....??"

சூறாவளியாய் ஏறியது என் சினம்...காப்பாற்ற.ஓடினேன்.,
"டேய்.. டேய் நில்லுடா... ராஸ்கல்.. " அவன் பின்னாடியே ஓடுகிறேன்.

அய்யோ அந்த பொண்ணை பிடிச்சுட்டான்... " பன்னிப்பயலே... டேய் பொறாம்போக்கு அவ மேல கை வைக்காதே...... " என் காட்டு கத்தல் அவன் செவியில் கேட்டு தலையை திருப்பி என்னை பார்த்தான்...

யப்ப்பா...மகா கோரமான முகம்.... போதையேறிய கண்ணில் காமவெறி. எனக்கே பயமா இருக்கே.. அந்த பொண்ணுக்கு...

அந்த பெண்ணை பார்த்தேன். " அடப்பாவி.............." அந்த பெண்.... 6 வதோ 7 வதோ படிக்கும் சிறுமி....! இந்த நேரத்தில எப்படி இவன்கிட்ட மாட்டினா.

"அடேய் அந்த குழந்தையை விடு.... விடு.. " சொல்லிக்கொண்டே அவன் அருகில் செல்கிறேன்... அந்த சொறிநாய் பயலுக்கு என் மேல பயமே இல்ல.. அந்த சிறுமியை கீழே தள்ளிட்டான்.....

என்ன செய்ய என்ன செய்ய......? தாவி பாய்ந்தேன் அந்த காட்டேரி மீது.....

அவன் அந்த சிறுமியை விட்டுவிட்டான். என்னை தாக்க முற்பட்டான்.....

என் கையில் ஆயுதம் ஏதும் இல்லை. கோபம் கோபம் கோபம் என்னை மிருகமாய் மாற்றியது. அவனை கீழே கிடத்தி அவன் மீது ஏறி உட்கார்ந்து..

" பாப்பா .உன் வீடு எங்க. அதோ அங்க என் கார் நிக்குது பாரு.... போ போ அங்க போ..."

இவன் " ஏன் நீயும் இந்த பிகரை....................****** "

அவன் வாயிலே ஒரு குத்து விட்டேன்.. " பாப்பா நீ ஒடிடுமா.. உன் வீடு எங்க... ? "

" அங்கிள். பக்கத்துல சில்ரஷன்ஸ் ஹாஸ்டல்ல இருக்கேன், அங்கிருந்துதான் துரத்திட்டு வரான்."

"சரி சரி... போ அங்க.. கா... கா காருகிட்ட வெயிட் பண்ணு.. இங்க நிக்காதே..... ஓடு.. மா "

அடிவாங்கியும் இவன் அடங்கவில்லை... " மச்சி...... செம பீஸ் மிஸ் பண்ணிட்டீயே..........."

" அடத்தூ....................!! வெறி ஏறியது.. வெறி ஏறியது.... வெறித்தனமாய் அவனை அடிக்க.... அடிக்க.. அவன் காதை கடித்து இழுத்து மென்று துப்பினேன். " தே.... மவனே... நீயும் செம பீஸ்தான்.... டா .. செம டேஸ்ட் டா.... "

கதறினான்.... " தண்ணியடிச்சா... உன் ஆயாவை கூட...... *** " அடிக்க ஓங்கியப்போது... என் சட்டைப்பையிலிருந்து ஒரு பொருள் தவறி விழுந்தது.... எடுத்தேன். " ம்ம்ம்ம் இது தான் சரியான ஆயுதம் " அவன் தொண்டையில் குத்தி குத்தி குத்தி சொருகி சொருகி அந்த காம காட்டேரியின் இரத்தத்தை வெளியேற்றியும் ,வெறி அடங்காமல்....அவன் இடுப்புக்கு கீழே.. தொடைக்கு நடுவே.... என் கையில் கிடைத்த அந்த ஆயுதத்தால்.........

-- சதக்... சதக்... சதக்....---

"பொறுக்கிகளா... இத ஒண்ண வச்சிக்கிட்டு தான்.. ஆம்பிளைன்னு திமிருல மேயுறீங்க... "

என் முகமெங்கும் இரத்தம்.. என் வாயெங்கும் இரத்தம்.. என் உடலெங்கும் இரத்த வாடை.. ஆனால் என் கையில்.............. என் கையில் .... 'மை" த்துளிகளுடன் இரத்த துளிகள்....

ஆமா..........................


கவிதை
கதை
திரைக்கதை
வசனம்- ந்னு

எழுதிய என் பேனா தான் அந்த ஆயுதம்.... அந்த பேனானால தான் அவன கொன்னேன்.....

ஹா ஹா ஹா ஹாஹா

**ஒரு படைப்பாளி நான் படைத்துவிட்டேன் ஒரு பிணத்தை **
**ஒரு எழுத்தாளன் எழுதிவிட்டேன் ஒரு மரணத்தை.***

என் சினம் மாறி சிரிப்பு வந்தது................

" நான் ரவுடி ..ரவுடி ரவுடி ரவுடி ரவுடி "
கொலை .. கொலை.... நான் இப்போ கொலைக்காரன்..
அய்யோ அய்யோ

நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்..


சிரிப்பு மாறி சிந்தனை வந்தது....

" இ .. இ.. இந்த காமபன்னிக்கு ஏன் இப்படி வெறிப்பிடிச்சது.....! மொட்டுக்கும் பூவுக்கும் வித்தியாசம் தெரியாம ஏன் இப்படி இருக்கான்? வித்தியாசம் தெரிஞ்சாலும் கற்பழிப்பது தப்புன்னு தெரிஞ்சும் ஏன் தப்பு செய்றான் ?

ம்ம்ம் இதுக்கு முக்கிய காரணத்தில ஒன்னு............... தடுக்கி விழுந்தா திறந்திருக்கிற டாஸ்மாக்... கடைகள். !!

டாஸ்மாக் ..... மொத்த குற்றவாளிகளின் உற்பத்தி கூடம்.....!

அதுக்கு வைக்கிறேன் டா ...............வேட்டு................

இதுவும் படைப்பாக்கம் தான்...............!

================================================================


சில மாதங்களுக்கு பிறகு...!

"போதும்டி நீ பண்ணின மேக் அப்...! என்னை தானே பார்க்க வர.. போதும் போதும்....நீ எப்படி இருந்தாலும் எனக்கு நீ அழகுதானடி செல்லம்..... வா.... வா .. சீக்கிரம்....." இன்பக்குமரன்... தனது அலைபேசியை ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டிற்குள் சொருகி.... இரு சக்கர வாகனத்தில்... நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு காபி ஷாப்-க்கு செல்கிறான்.

அங்கு.................!!!! அந்த தேவதை வருகிறாள்...........?





( ரவுடி வருவான்..........)


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார் (4-Jan-15, 12:40 pm)
பார்வை : 1032

மேலே