மனிதப்பூக்கள்

வைகறைபொழுது
செவ்வானத்தையே
பழிப்பதுபோல...
சிவப்பாய்
மலர்ந்தது
ரோஜா !
கர்வமாய்
சொன்னது பூமியிடம்..


என்னைவிடக் கீழே நீ
வானத்தை போல உயர்ந்தவன் நான்
பாரேன் .. என் வசந்தம் வானத்துக்குமில்லை...


அந்திமாலை
தலைகவிழ்ந்துகிடந்தது
அதுதான்
கருவானத்தில்..
கருமையாகத்தான்


பொறுமையாக பூமி சொன்னது


எத்தனை ஏகாந்த நினைவுகள்
உன்னிடத்தில்
ஓர் நாளில்..


என்னைவிட்டு மேலே நீ
ஆனால் ..
என்னுள்தான் நீ


கர்வத்தின்
ஆகார்க்ஷணத்தில்


வாழ்க்கையின்
நிஜத்தையும்...
கூடவே தொடரும்
இறப்பின்
நிழலையும்
புரிந்துகொள்ளாதது
உன் தவறு... !


மார்க்கண்டேயம்
தேடுவது
மனிதப்பூக்களும்தான்... !!!

எழுதியவர் : muruganandan (15-Apr-11, 3:41 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 344

மேலே