இரண்டாதாரம் நீ

இரண்டாதாரம் நீ

சொல்லாமல் சொல்லுகிறேன்
சொந்தமாய் நீ வேண்டும் என
சொல்லிவிடு நீ எனக்கு
சொந்தமே நான் உனக்கு என்று.

கண்ணும் கருத்துமாய்
காத்து கொள்வேன் உன்னையும்
கட்டிய மனைவி கதறினாலும்
கண்டு கொள்ளாதே நீ..

முதல் தாரம் அவளும்
இரண்டாதாரம் நீயுமாய்
தரத்தோடு வாழவே
அழைக்கின்றேன் வந்து விடு.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (5-Jan-15, 12:16 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 72

மேலே