முதல் மனைவி நீ தானே
முடிவாய் சொல்கிறேன்
முதல் மனைவி நீ என்று
முற்றிலும் சொல்வேன்
முதல் மனைவி நீ தான் என்று..
முறையோடு வந்தாய் நீ
முடிவு வரை உன்னோடே
முடித்து கொள்வேன்
முமுமையாய் உன்னோடு...
என்னை முறைத்து பார்த்தவளை
முறையிடுகிறாய் நீ
முறைத்தவள் எல்லாம்
முறையாகுமா?.எனக்கு.
முறை தவறிய உறவுக்கு
முற்றுபுள்ளி வைத்து விட்டேன்
முறையோடு வாழவே
ஆசைப்பட்டேன் உன்னோடு..