எங்களின் வீடு

எங்கள் வீட்டிற்கு
வெளியே
பேருந்துகள்
அதிகமாய் செல்கின்றன ,

எங்கள் வீட்டில்
எப்போதும்
ஆட்கள் நடமாடி
கொண்டே இருப்பார்கள் ,

எங்கள் வீட்டில்
தனி தனி
அறைகள் என்று
எதுவும் இல்லை ,

ஆனால் எத்தனை
விருந்தாளி வந்தாலும்
தங்கக்கூடிய
வசதி இருக்கிறது ,

எங்கள் சுகந்திரம்
கண்டு உலகம்
வெட்கபடுகிறது,

நாங்கள்
இறந்தகாலம் பற்றி
வருந்தவும் இல்லை
எதிர்காலத்தை எண்ணி
கவலையும் அடையவில்லை ,

இன்று எங்கள்
பிள்ளைகளுக்கு நாங்கள்
கொடுக்கும் சுகந்திரம்
பள்ளிகளை உங்கள்
பிள்ளைகளுக்கு கிடக்கவில்லை ,

எங்கள் வாழ்கை
மரத்தடி நிழலிலும்
கோவில் மண்டபங்களில்
தொடங்கி

சாலைகளின்
நடைபாதைகளில்
ஆரோக்கியமாக
இம்பமயமாக
நடைபெறுகிறது ..

எழுதியவர் : ரிச்சர்ட் (5-Jan-15, 10:59 am)
Tanglish : yengalin veedu
பார்வை : 82

மேலே