முதுமை வரை நீயே

புரிந்து கொள் என்னை
புதிர் போடவில்லை
நீ பூத்த நாள் முதலே
பூத்தது எனக்குள்ளே..

புதுமையாய் வாழ்ந்திடவே
என் முதுமை வரை
புதுமண தம்பதியாய்
புத்துணர்ச்சி பல பெற்று...

இப்புவியில் புன்னகை மட்டும்
நமக்குள்ளே பூர்விகமாய் குடி
அமர்ந்து..சந்தோஷ கடலிலே
மூழ்கிடலாம் வா பெண்ணே.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (5-Jan-15, 1:09 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 76

மேலே