சாதி ஒழி மதம் அழி சாதி - பொங்கல் கவிதைப் போட்டி 2015

சாதி ஒழி
பிறப்பென்ற வரம் கொண்டோம் மனிதா!
கல்லென்றும்,மரமென்றும்,பிறையென்ருமாம்
நம்மை நாம் அறிந்திட !
கரைகொண்ட நிறத் துணியாம் - சாதி
போர்த்திய உடையணிந்து மேலோங்கி நடையாம் - உயர்ந்த சாதி
அரை உடையணிந்து கீழ்நோக்கி கைகும்பி நடையாம் - கீழ் சாதி
சாதி விளைவித்த மரமா- தீண்டாமை
வேரோடு ஒழித்துவிட்டு வா
ஒற்றுமையை வளர்க்க !

மதம் அழி
படைத்தவன் மூன்றுவிதம்தான் மனிதா !
அவை வணங்ககூடியதுக்கு மட்டும்தான்
எரிவதற்கு அல்ல !
மதம் படைத்த ஆயுதமா - கத்தி ,துப்பாக்கி ,வெடிகுண்டு
மதமென்ற போதையாம்- தீவிரவாதம்
மனித அழிவை நிறுத்தி !
தீவிரவாதத்தை அழித்துவிட்டு வா
தேசத்தை காக்க !

சாதி
பெருமையுடன் சொல் மனிதா!
நாம் "ஆண் சாதி,பெண் சாதி"
என்று


இக்கவிதை என்னால் எழுதப்பட்டது
பெயர் :கு.மணிகண்டன்(அடைமொழி ராஜு ச்வீட்)
இடம் : கோயம்புத்தூர்
அனைத்து விவரகளும் எழுத்து பதிவேட்டில் உள்ளது.

எழுதியவர் : மணிகண்டன்(ராஜு ச்வீட்) (6-Jan-15, 6:59 pm)
பார்வை : 167

மேலே