சாதி ஒழி மதம் அழி சாதி -பொங்கல் கவிதைப் போட்டி -2015 ரகு

நிறங்களில் மொழிகளில்
இனங்களில் மதங்களில்
தவப்பேற்றின் வாழ்வதனில்
தறிகெட்ட பேதங்கள்

வேதங்கள் மொழிந்தனவா ?
வரலாறு கடந்தேகிய
வள்ளுவக் குறள்களெய்தியதா?
சரித்திரஏடுகளில் சான்றோர்கள் பதிந்தனரா ?

சாதீயம் உயிர்த்ததெங்கு?

சாடுங்கள் சாதீயப் பித்தர்களே

சட்டதிலேன் சாதிச்சான்றிதழ்
குடும்பத்திலேன் கௌரவக்கொலைகள்
கிராமத்திலேன் பிரிவினைக் கோவில்கள்
பண்ணைகளிளேன் பரிதவிக்குங் கூலிகள்

குறுகிய அரசையும் கொறித்திடுங்கள் -ஆயினும்

முகநூலில் படியுங்கள்
முகமறியாத் தோழமையை
காதலில் உணருங்கள்
கலப்பின்பால் மகிழ்ச்சியை
மழலைகளில் காணுங்கள்
ஒற்றுமையின் பரவசத்தை

சிலிர்த்துப்பாருங்கள் சமத்துவத்திலும்

பகுத்தறிவில் தேராவிடில்
பருகுங்கள் சாதீயம் !
--------------------------------------------
இக்கவிதை என்னால் எழுதப்பட்டது என
உறுதியளிக்கிறேன்
விலாசம்:அ.ரகு சுஜய் டிஜிடல்ஸ்
374,அவினாசி ரோடு பெரியார்காலனி
திருப்பூர் தமிழ்நாடு இந்தியா
அலைபேசி: 91 83447-34304

எழுதியவர் : அ.ரகு (6-Jan-15, 6:33 pm)
பார்வை : 83

மேலே