எம்மொழி செம்மொழி

தமிழ் ..
எமது
உயிரினில்
உதிரத்தில்
ஊனில்
உணர்வினில்
இரண்டறக்கலந்திருக்கும்
இனியமொழி தமிழ் ..

எம்மொழி
தமிழ் ,
ஈடுஇணையற்ற
செம்மொழி !

இலக்கணணங்கள்
இலக்கியங்கள் ,
செம்மொழியாம்
எம்மொழிதமிழில் உள்ளதுபோல்
எம்மொழியில் உள்ளது ?

ஒல்காப்புகழ்
தொல்காப்பியம் ..

அகம் ..
புறம் ..

வள்ளுவம் ..
சிலம்பு ..

இன்னும்
பன்னூறு
இதயத்தில் சுவடுபதிக்கும்
இலக்கியங்கள்,
தங்கமொழி
தமிழில்தான் உண்டு .

தமிழ்
கற்கக்கற்க
கற்கண்டு .

தமிழை
அறிய அறிய
அறிவுண்டு
திருவுண்டு.

ஆயிரமாயிரம்
மொழிஉண்டு
ஆயினும்
தமிழ் போல்
மொழிஉண்டொ ?

தாய்மொழியாய்
தமிழை
வாய்மொழிய
தவம் புரிந்தோம் யாம் !

பிறந்தால்
தமிழனாய்
பிறக்கவேண்டும் .
இறந்தால்
தமிழ் கற்று
இறக்கவேண்டும் !

எழுதியவர் : அண்ணாதாசன் (6-Jan-15, 9:37 pm)
சேர்த்தது : அண்ணாதாசன்
Tanglish : emmoli semmozhi
பார்வை : 481

மேலே