வாருங்கள் இப்படியும் நாம் காதலிப்போம் -பொள்ளாச்சி அபி

ஏனடா.. மானிடா
உனக்கிந்த கொலை வெறி..?
மதத்தின் பேராலே மனிதத்தை மறக்குறே
சாதியின் பேராலே தீயைத்தான் மூட்டுறே..!

ராமன் சீதை,கண்ணன் ராதை
முருகன் வள்ளி என்றே நீயும்
வணங்கும் தெய்வங்கள் காதல் செய்யுதுடா
வாழ்க்கையில் வந்தால் வெறுப்பது ஏனடா..?

கடவுள் தோன்றும்முன் காதல் இருந்ததடா..
கடவுளர் கதையிலும் காதல் இருக்குதடா..
மதத்தினும் மூத்தது எங்கள் காதலடா.
சாதியின் எல்லைகள் தடுத்திட முடியுமாடா.?

உயர்வு தாழ்வென்று பிரித்தது நீயடா..
உயிர்கள் சமமென்று சொல்வது காதலடா..
காதல் என்பது சமத்துவக் கருவியடா..
மறந்தால் மனிதா..உன் மூளையும் பழுதடா..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (6-Jan-15, 9:38 pm)
பார்வை : 125

மேலே