சமய நதிகளின் சங்கமம் இறைவன்
இந்துமதம் எனும் நதிதான் இனிதாய் பாய்ந்து
இறைவன் எனும் பெருங்கடலை புகுந்து தங்கும்.
அந்தமிலா பேரன்பில் மையங்கொண்டு
அருள் காட்டிப் பாலித்த அய்யன் இயேசு
தந்த கிறித்தவ மதமாம் தனிப் பேராறும்
தடம் கண்டு இறைவன் எனும் கடலில் சேரும் .
வந்த பெரும் செல்வம் தனை வரியார்கீந்து
வாழ்ந்திடலே நலம் என்று நபிகள் சொன்ன
முந்து தமிழ் இசுலாமாய் முளைத்த ஆறும்
முடிபாக இறைவன் எனும் கடலைச் சேரும் .
இந்தவகை நோக்கிடிலோ பெளத்தம் என்னும்
இறை இன்மை போதித்த சமயம் கூட
அந்தத்தே அடைந்து விடும் நோக்கம் ,அந்த
ஆண்டவனே எனக் கூறல் ஆகும் என்பேன் .
எந்தமை காக்கின்ற இறைவன் தானும்
எல்லாமாய் இன்மையுமாய் இருத்தல் ஓர்க !!!!