பெண்ணடிமை
பெண்டிர் அடிமை ஆனார்
என்றால் பெற்றதோர் தாயும்
அடிமை தானே . பெற்றதோர்
தாயும் அடிமை என்றால்
பிறந்த மக்களும் அடிமைகள் ஆவர் .
அடிமையாய் பிறந்தோர்
ஆற்றுவது என்ன ?
உடையிலும் அடிமை .
உணர்விலும் அடிமை .
நடையிலும் அடிமை .
நாகரீகத்திலும் அடிமை .
தடைகள் எதும்
சொல்லுதல் இன்றி
தன்மானத்திலும் தாழ்ந்து போவர் .