இதயம் வெடிக்கும்

அரசுத் திட்டம்
அலையாய்ப் பெருகும்
ஆனால் பயனோ இல்லை இல்லை .
உரசிப் பார்த்தேன்
உற்றது யாதென
உதித்தது சிந்தனை
'பெண்ணடிமை ' என
பெண்ணைப் பெற்றால்
பெருமை இலையென என்னும்
மக்கள் இன்றும் உளரே .
பெண் மகவென்றால்
பிறந்த வுடனே
மண்ணில் புதைக்கும்
மாபாதகத்தை என்னும் போதே
இதயம் வெடிக்கும் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (7-Jan-15, 4:05 pm)
Tanglish : ithayam vedikkum
பார்வை : 106

மேலே