இப்படி நாம் காதலிப்போம் பொங்கல் கவிதைப் போட்டி 2015
உன் ஒற்றைப் பார்வையில் ,
என் விழியின் ஒளி இழந்தேன் !
ஆடிமுன் நின்றாலும் உன்
பிம்பமே என் விழித்திரையில்!
காதலைச் சொன்ன உன் உதட்டசைவில்
உருக்குலைந்தேன் நான் !
என்னுள் உயிர் ஓடுவதை
அக்கணம் தான் உணர்ந்தேன் !
உனை அடைந்தேன் காதல் செய்ய!
அன்று முதல் .......
உன் மூச்சுக் காற்றைத்தான்
நான் சுவாசிக்கின்றேன் !
உன் கால்களால் நான் நடக்கின்றேன் !
உன் இதயத் துடிப்பில் நான் வாழ்கின்றேன் !
என்னுள் உனை நான் உணர்கின்றேன்!
நம் அன்பில் உலகம் சிறிதாக வேண்டும் !
நம் காதல் இப்பூவுலகு உணர வேண்டும் !
உண்மைக் காதல்
உயர்ந்த காதல்
உன்னத காதல்
இதுவென பறை சாற்ற வேண்டும் !
நம் உயிரோடு....
நான் உறவாட வேண்டும் !!!
இந்த கவிதை உண்மையிலேயே நான் படைத்ததுதான் என உறுதி அளிக்கின்றேன் .
பெலிக்ஸ் லெரின்ஸ்
வயது 38
135 கிறிஸ்து நகர்
நாகர் கோவில் -3
கன்னியாகுமரி மாவட்டம் .
தமிழ்நாடு
இந்தியா .
8903290903