நாளைய பொழுது விடியுமா நமக்காக

வீட்டின் ஓட்டை அடைக்கவென்று
ஓட்டை விற்றுவிட்டு
ஒதுங்கி நிற்குது ஒரு கூட்டம் ..

உல்லாச வாழ்வு உழைக்காமல் கிடைக்கும் என்று
வாய்கிழிய வாக்குறுதிகொடுத்தவனுக்கு
வாக்கினை அளித்திவிட்டு
வானத்தை பார்க்குது ஒரு கூட்டம்..

மாற்றம் வேண்டும் என்று
மாடாய் உழைத்து முறைப்படி
வாக்களித்து
முழித்துக்கொண்டு ஏங்குது ஒரு கூட்டம் ..

மாஜி அரசியலின்
மகுடி ஊதலில் மானத்தை விற்று
பரிதாபமாய் படமெடுத்தாடுது
ஒரு கூட்டம் ...

தேர்தல் நாடகம் முடிந்ததுவே
தேடுது மனிதம் நீதியையே
விடியுமா பொழுது எமக்காக
வேண்டுது ஒரு கூட்டம் கோயிலிலே ..!!!

எழுதியவர் : கயல்விழி (8-Jan-15, 9:25 pm)
பார்வை : 344

மேலே