சாதி ஒழி மதம் அழி சாதி - பொங்கல் கவிதைப் போட்டி 2015
சாதி... சாதி...சாதி .....!!!
கருத்தை பாதியாய் புரிந்துவிட்டாயே.....
சாதியில் மதம் பிடித்த சகதியே...!!
சாதித்து கொள்வதற்காகவே தொழில்கள் ...
சாவை தடுப்பதற்காகவே தொழில்கள் ...
செய்தொழிலை சாதியாக்க அல்ல தொழில் ...!!!
தனக்கென தொழிலை தொடங்கினால் ...
அது எப்படி சாதியாகியது ..?
விவசாயம் செய்தால் வேளாளன் ....
கடல் தொழில் செய்தால் கரையான் ...
மனித முயற்சியின் சாதனைகள் .....
சாதியானது மனிதகுணம் பாதியானாதால் ...!!!
உடல் செயல் பட தொழில் வேண்டும் ....
உளம் வளம் பெற மதம் வேண்டும் ....
சாதி வெறியாலும் மதவெறியாலும் ....
உருக்குழைந்து போனதே சமூகம் .....
உணர்வை தூண்டுபவர்களும் உணரவேண்டும் ...
உணர்ச்சி வசப்படுபவகளும் உணரவேண்டும் ...!!!
உள்ளத்தில் இருக்கும் மதத்தை அழி ....
மதம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது ....
உழைத்து உண்ணுவதே உயர்வென்று எடு ...
சாதி என்ற ஒன்று இருக்கவே இருக்காது ....
உயிர் காலத்தில் ஏதோ ஒன்றை -"சாதி "...
முடியும் எழுந்து "சாதி" விரைந்து "சாதி"....!!!
+
எழுதியவர் ;கே இனியவன்
வசிப்பிடம் ; இலங்கை
விலாசம் ; 391 .3/2 அழுத் மாவத்தை கொழும்பு -15
கைபேசி எண் ;0778002376
வயது ;49
இப் படைப்பு என் சொந்த சிந்தனையில் உருபெற்றது என்பதை உறுதிப்படுத்துகிறேன்