இப்படி நாம் காதலிப்போம் - பொங்கல் கவிதைப்போட்டி 2015”
ஒருதலை காதல் வஞ்சகனிடம்
அமிலத்தில் குளித்த அக்கினியே
உன்னில் கறைபட்ட மனதை
என் கண்ணீர்விட்டு அழித்து அன்பை விதைப்பேன் வா
அங்கத்தின் அறைகளில் அடுக்கி வைத்துள்ளேன் காதலை
வாழ்க்கை என்ற சுங்கவரி நான் செலுத்துகிறேன் வா
பசுந்தோல் போர்த்தி செந்நாய் கூட்டத்தால் சிதைக்கபட்டாய்
உடல் பசி ஆற்றும் மிருகமல்ல நான்
காதல் உணர்வு பசி போதுமே
நீ விளைத்த காதல் அறுவை செய் வா
என் நினைவு பெட்டகத்தை திறந்து பார்க்கும் போது
என்னில் எழுதிய காவியத்தில் நீ தலைவியாக போகிறாய்
ஓன்று நன்றென்று பெற்று
உனக்கு நானெற்றும், எனக்கு நீயெற்றும்
சான்றோர்கள் வாழ்த்த நாளை தலைமுறைக்கு சான்றாவோம் வா
சாக்கடை சூழ்ந்தும் வாசாம் மாறாதா மலரே
உன்னில் ஒடிந்த இதயத்தை என்னிடம் கொடு - நாளை
ஓராயிரம் பிம்பமாய் ஒளிர விடுவேன் வா
நம்மை பார்த்து உலகம் ஆழகாகி போகும்வரை
இப்படி நாம் காதலிப்போம்
---------------------------------------------------------------------------
இந்த கவிதை என்னால் படைக்கப்பட்டது என்று உறுதி அளிக்கிறேன்
சி. வேலு
வயது -25
சிவாஜி நகர்
போளூர் வட்டம், திருவண்ணாமலை
கைப்பேசி - 7418202364, 8124646512
------------------------------------------------------------------------------
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
