தலைவர்கள் எப்போதும் பிறப்பதேயில்லை
இனம் மொழி நாடு கடந்து
மதம் சாதி தீண்டாமை கடந்து
மரக்கட்டை மனிதர்களின்
மத்தியில்...
காமத்திலேயே சிலாகித்து கிடக்கும்
வல்லூறுகளுக்கு இடையில்
தலைவர்கள்
எப்போதும் பிறப்பதேயில்லை.
அவர்கள்,
வலியாலும்
வன்மத்தாலும் வேறு வழியில்லாமல்
தயாரிக்கப்படுகிறார்கள்...சுதந்திரத்துக்காக.