அருள்வாய் தமிழே - யாழ்மொழி
முதலாய் முடிவாய் முழுமை யடைந்த
முதன்மை மொழிகளுள் முன்னிற்கு மின்பமே
தேயாப் பிறையே தெவிட்டா சுவைத்தேனே
காயாம்பூ! கன்னித் தமிழ்
எளிதர வில்லா எழுந்தருள் கதிராய்
அயராப் பொழியுந் தண்மை யுடையாள்
குலையா எழிலில் வியந்துநிற் கின்றேன்
என்னை ஏந்திக் கொள்வாய்
தென்றல் குளிராய் தீஞ்சொல் லமுதாய்
தென்முனி தாய்நீ தேமா மகள்
செவ்வியல் ஈரெட்டு பயின்றே யானும்
வெண்பா வடிக்க அருள்வாய்
(இது என் முதல் முயற்சி, மூத்தக் கவிஞர்கள் படித்து பிழைகள் சுட்டிக்காட்டுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...)
இந்த முயற்சி உருவாக பாதை வகுத்த ஐயா கல்பனா பாரதி அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன்....

