வேறொரு வாழ்க்கைக்கு
எத்தனை முறை
உன் கண்கள் எனும் கதவு
என்னை பார்த்து திறந்திருக்கும்??
உன் பிஞ்சு விரல்கள்
எத்தனை நாட்கள் எனது
குறுஞ்செய்திக்கு பதில்
அனுப்ப காத்திருந்திருக்கும்??
உன் பட்டுப் பாதங்கள்
எத்தனை முறை எனது
வருகையை எதிர்பார்த்து
ஓடி வரக் காத்திருந்திருக்கும் ??
எனக்கு பிடித்த வண்ண ஆடைகளை
தேடி தேடி வாங்க துடித்திருந்த
உன் விருப்பம்...
என் விருப்ப உணவை தவிர
வேறெதையும் உண்ண
விரும்பாமலிருந்த உன் மனம்,
எப்போதும் என் சிந்தையை படிக்க நினைத்திருந்த
உன் சிந்தை....
இப்படி ஒவ்வொரு நிமிடமும்
தவியாய் தவித்து
துடியாய் துடித்து
காத்துக் காத்து
என் உயிர் அணுக்களை வேக வைத்த நீ
இத்தனை விரைவில்
வேறொரு வாழ்க்கைக்கு தயாரான
சோகம் என்னென்று சொல்வது??