நம்ம இடத்தை, நம்ம நாட்டை நம்ம தானே
எங்களது team -இல் வேலை விசியமாக வந்த US .Customer ஒருவருக்கு நமது நாட்டுடைய கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளவும் , மற்றும் நமது சென்னையை சுத்தி பார்க்கவும் ஆசையாக இருந்ததால்.. அவருக்கு சென்னையை சுத்தி காட்டும் பொறுப்பை நான் மற்றும் இன்னும் மூன்று நண்பர்களும் அந்த பணியை ஏற்று கொண்டோம்.. !!!
மகாபலிபுரம், கற்கோவில், திருவிடந்தை கோவில்... என அழகான இடங்களை சுற்றி பார்த்தோம்.. !!
அவருக்கு நமது நாட்டின் மீது கொண்ட எண்ணங்கள், அவருக்கு பிடித்த விசியங்கள் மிக அற்புதமான ஒன்றாக
இருந்தது.. !! 9 மணி அளவில் அவரை அவருடைய விடுதிக்கு விட சென்ற போது அவருடைய ஒரு மிக மிக எளிதான
ஒரு செயல் எங்களை மிக மிக மிக அதிகமாக பாதித்ததோடு, அதிகமாக யோசிக்கவும் செய்தது.. !!
அவர் விடுதியில் இறங்கிய உடன் செய்த வேலை.. அவருடைய சட்டை அறைகளில் இருந்து (watergane cap cover, biscuit packet cover, choco cover) எடுத்து அங்கு இருந்த குப்பை தொட்டியில் போட்டார்.. !!
அவர் அந்த குப்பைகளை எங்கு வேண்றுமானாலும் எறிந்து இருக்கலாம்.. !! ஏனெனில், போகும் வழி எங்கும்
எல்லா பாதைகளும் குப்பையாக தான் இருந்தது..!!!
வெளிநாட்டு காரர் ஒருவர் நமது நாட்டை சுத்தமாக வைக்க நினைத்து அவர் செய்த இந்த சிறுவேலை நாம் என்றுமே செய்து இருக்க மாட்டோம்.. முக்கியமாக போகும் இடங்களில் கூட சுத்தமாக வைக்க நினைப்பது மிக பாராட்ட பட வேண்டிய ஒன்று.. !!!
இனி மேல் சின்ன சின்ன குப்பையை கூட வெளில தூக்கி போட கூடாதுன்னு தோனுச்சி..!! இது எந்த வித எடுத்துக்காட்டும் இல்லாம நம்ம செய்ய வேண்டிய ஒரு விசியம் தான்.. !! இதை பகிர்ந்துக்க நான் விருப்ப பட்ட
ஒரு காரணம் நம்மள யாரது இதே மாதிரி தூக்கி போடும் போது இது நினைவு வந்தா நல்ல இருக்கும்.. !!!
நம்ம இடத்தை, நம்ம நாட்டை நம்ம தானே சுத்தமா வச்சிக்கணும்..!! :-)