சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதைப் போட்டி-2015

சாதி ஒழி! மதம் அழி! சாதி!.
ஏதி எடு! எதிரி அடி! சபதி!
சேதி இது! சகதி அது! வாதி!.

முருகன் வந்துக் குறவள்ளியை மணந்து
பெருமை சேர்த்தான் கலப்பு மணம் செய்ய
சருமத்தில் வெள்ளைக் கருப்பு மனிதரோ
கவுரவம் பார்ப்பர் கொலைமழை பெய்ய

அத்தானம் தன்னிலே அத்தியயனத்திலா
வடகலைக்கும் தென்கலைக்கும் வம்பு
மகத்தில் புக்கதொரு சனியென இந்தச்
சகத்தினில் சாதி மதம் நம்பு.

அறம்புரி கொள்கையெது மறம்புரி செய்கையெது
திறன் ஆய்வு செய்து அறிக
பிறையினைத் தொழுது பிண்டத்தை உண்பார்க்கு
உறையலே மூளையெனத் தெளிக

சந்தரம் தன்னிலே சந்தப்பா பாடிய
சம்பந்தன் கூறினானே
“சமண மகளிரை கற்பழித்திடத் திருவுளம்”
சம்போகம் செய்திடத்தானே

அப்பரும் அவன்வழி தப்பாமல் கூறினார்
“வாய்ப்பீரல் முண்டங்கள்” என்று
தப்பறை பரப்பிடும் சாதியை மதத்தினை
சமித்தலே பாவக் குன்று.
சாதி ஒழி! மதம் அழி! சாதி!.

இது எனது கவிதை என உறுதி அளிக்கிறேன்,

தா. ஜோசப் ஜூலியஸ்
எண்.4/45, 11வது டிரஸ்டு கிராஸ் தெரு
மந்தவெளிப்பாக்கம்,
சென்னை-600028
தொலைபேசி எண்; 9884715578..

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ். (12-Jan-15, 10:52 am)
பார்வை : 83

மேலே