ஐயப்பன் திருப்புகழ்

கோல சுந்தர ரூபா நமோ நம
வாச சந்தன தேகா நமோ நம
நேச புஷ்கலை நாதா நமோ நம சபரீசா

சாத கம்புரி தீரா நமோ நம
கான கம்புலி வேடா நமோ நம
ஆண வம்ஒழி சூரா நமோ நம குருநாதா

தேவ சன்னதி ஐயா நமோ நம
வீர பந்தள வாசா நமோ நம
பாத பங்கய பாலா நமோ நம வினைதீராய்

சீர கம்கொடு சீலா நமோ நம
மூல மந்திர வேதா நமோ நம
தீப நல்லொளி சோதீ நமோ நம அருள்தாராய்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Jan-15, 12:35 am)
பார்வை : 329

மேலே