மனசுக்குள் குளிர்

அந்த குளிரிலும்..
மழையின் சாரலில் ..
பேருந்து நிற்கும் இடம் தாண்டி ..
முணுக்கென்று..
எரிந்து கொண்டிருக்கும்
ஒரு விளக்கின் ஒளியில் ..
தேநீர்கடை..
பன்னாட்டு நிறுவனத்தில்
பணியிலுள்ள எனக்கு..
பனிக் காற்றின் இடையே..
அவசியமாகத்தான் பட்டது..
ஓர் கோப்பை தேநீர்!
ஆவி பறக்கும்
அந்த சூடு..கொஞ்சத்தில் ..
ஆறிப் போக..
மீண்டும்..ஒரு கோப்பைக்கு
சைகையில் .. சொன்னேன்..
பக்கத்தில் வந்து நின்ற..
அந்த முதியவர்..கண்களில்..
ஒளியில்லை..
உடம்பில் தோலே இல்லை..
நாலு வடையும் தேநீரும்
சொல்கிறேன்..சரியா..என்றேன்..
அவர் கண்களில் ஒளி வந்தது..
என் பேருந்தும் வந்தது..
மொத்தமாய் ஐம்பது ரூபாயை
கடையில் கொடுத்து
மிச்சத்தை அவரிடம் தரச் சொல்லி
நகர்ந்தேன்..
மனமெல்லாம்..
குளிர் நிறைந்தது!

எழுதியவர் : கருணா (13-Jan-15, 9:31 am)
Tanglish : manasukkul kulir
பார்வை : 115

மேலே