உச்சங்கள்

அவமானப் படுத்தப் படுதலின்
வலியோடு..
தடுமாற்றத்துடன்..
படிகளில் இறங்கி நீங்கள் ..
வந்ததுண்டா..?
..
ஓட்டைப் பாத்திரத்தில்
நீரை சிந்தாமல்
கொண்டு போய் சேர்த்ததுண்டா?..
..
முடியவில்லையே என்று கலங்கி
நின்றதுண்டா..?
எள்ளி நகையாடுதல்களின் முன்னே..
தலை..கவிழ்ந்ததுண்டா..?
..
அப்படியென்றால்..
..
உச்சத்தை ஒரு நாள் தொடுவீர்கள்..
மிச்சத்தை..
உங்கள் மனவுறுதி..
பார்த்துக் கொள்ளும்..
..
முயற்சிகள் மட்டுமே..
உங்கள் துணையாக..
இருக்கட்டுமே!