கடல்

விரிந்து கிடக்கிறது
கவிதை
நீலவண்ண எழுத்துக்களால்
நிலையற்ற வாழ்வின்
நிதர்சனம் சொல்கிறது.

வாசித்து முடித்தவர்கள்
புது புது அர்த்தங்களை
சொல்லி விட்டு
வந்த வழி போகிறார்கள்.

கொஞ்சம்
காது கொடுத்து கேளுங்கள்
உங்கள் மனசு
சுத்தப்படும்.

எழுதியவர் : selvanesan (13-Jan-15, 4:45 pm)
Tanglish : kadal
பார்வை : 89

மேலே