என் அழகு கன்னுகுட்டி

நெஞ்சில் உன் ஞாபகம் அடி பெண்ணே
கதவோர இடுக்கினில் என் கன்னுகுட்டி...!

குழந்தை பருவத்தில்
ஊர் பாக்க ஓர் முத்தம்
உறவிற்காய் ஓர் முத்தம்
உனக்கும் எனக்குமாய் ஓர் முத்தம்
என் முத்த மழை பொழிந்தவள் ...

இன்று மங்கை பருவத்தில்
கதவருகினில் ஓர் மறைவினில்
கால் விரல் கோலம் போட
நாணத்தால் முகம் சிவக்க

பாவாடை சட்டையில் பார்த்தவள்
இன்று தாவணி பாவாடையில்
வெட்கம் என்ற ஆடை
முழுவதுமாய் முகத்தை மறைக்க

ஓர் வார்த்தை பேசாமல் வதை செய்கிறாய்
என் அழகு கன்னுக்குட்டி- இன்
முத்ததிற்க்காய் ஏங்கும் இந்த மாமனை காணாமல்....!

எழுதியவர் : யாழினி venkatesan (13-Jan-15, 10:17 pm)
Tanglish : en alagu kannukutty
பார்வை : 224

மேலே