36-தந்திர காட்டில் நான் 4-உள்முக தரிசனம்-கார்த்திக்

தத்துவதரிசனம் (37)

நேரத்தை களிப்பவன்-உலகத்தோடு
வாழ்கிறான்
நேரத்தை கழிப்பவன்-உள்ளத்தில்
நோகிறான்
நேரத்தை கணித்தவன் -உண்மையை
அறிகிறான்

தத்துவதரிசனம் (38)

அறிவாளிகளுக்கு மத்தியில்
அடிமையாய் வாழ்வதை விட
முட்டாள்களுக்கு மத்தியில்
சுதந்திரமாய் வாழ்ந்து விடு
சுதந்திரம் மட்டுமே உனக்கு நிம்மதியை
நல்கி ,மூளையில் பிரகாசத்தை பதிக்கும்.....
மாறாக அடிமைத்தனமோ நிம்மதியை
குலைத்து ,மூளைக்கு மலட்டுதன்மையை போதிக்கும் ......

தத்துவதரிசனம் (39)

ரசனைக்கு ஒரே ஒரு தகுதிதான் வேண்டும்
அது ரசிப்பதுதான் .....சில கணத்திலாவது
காரணமின்றி ,காரியமின்றி
உனது விழி கிறங்குகிறதா?
உனது மயிர்கால்கள் நட்டுகொள்கிறதா ?
உனது அங்கம் அதிசயத்தில் மலைக்கிறதா ?
உனது உள்ளம் ஊன்ற துடிக்கிறதா ?
உனது இதயம் துடிப்பதை மறக்க நினைக்கிறதா ?
உனது எண்ணம் மறைகிறதா ?
உனது பந்த பாசங்கள் பந்தயமிடமால் இருக்கிறதா ?-அப்போது
மார்தட்டி கொள் நான் ரசனைக்கும் ,ரசிக்க வைப்பதற்கும்
சொந்தக்காரன் என்று ................

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (13-Jan-15, 10:51 pm)
பார்வை : 64

மேலே