அவளழகு

நெற்றி
சிதறிய நிலா துண்டல்ல ...........
கண்கள்
கயல்கள் அல்ல .............
கன்னங்கள்
வகுந்த மாங்கனிகளும் அல்ல.......
உதடுகள்
அரும்பிய இதழ்களும் அல்ல..............
சிகை
கருத்த நீர்வீழ்ச்சியும் அல்ல............
தேகம்
சோழதேச சிற்பியின் சிலையும் அல்ல.......
எதன்
சாயலும் அவள் அல்ல .........
அவள்
அழகைப் பாட நான் கம்பனும் அல்ல..........
எதுஎதுவாயினும்
அவளழகு போல ஏதும் இவ்வுலகிலல்ல.......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
