இப்படி நாம் காதலிப்போம் - “பொங்கல் கவிதைப் போட்டி 2015”

என்ன சொன்னான்? என்ன சொன்னான்?
பருசம் போட வந்த மச்சான்! பக்குவமா என்ன சொன்னான் அக்கா!
புட்டு புட்டு வச்சிடேன் பாசமுள்ள அக்காவே..!

பட்டுச்சேலை ஒண்ணு வச்சு
மஞ்சள் கிழங்கப் பக்கம் வச்சு
குங்குமச் சிமிழக் கூட வச்சு
மல்லிகையைத் தொடுத்து வச்சு
கண்ணாடி வளையல் வச்சு
'என்னாடி'ன்னு கண்ணால பேச வச்சு
மருதாணி அரைச்சு வச்சு
பிரியாணி வாசம்போல மனம் பூரா மணக்க வச்சு
பருசத்தட்ட கொடுத்துப்புட்டான்.. பாவி மனச பறிச்சுப்புட்டான்...

பணத்தை எல்லாம் விட்டுடி
மனசமட்டும் எடுத்துவாடி.. பக்குவமா காதலிப்போம்..

சீர்செனத்தி வேணாம் புள்ள‌
உன் சிரிப்பு மட்டும் போதும் புள்ள‌
சிதறாம எடுத்துவாடி.. சிலு சிலுன்னு காதலிப்போம்..

தவிர்க்க முடியா அவன் பார்வைக்குள்ள‌
நான் தடுமாறி தானாகவே விழுந்து விட்டேன்

கை பிடிக்கும் நேரம் முதல்
கடைசி மூச்சிருக்கும் நேரம் வரை
கண்ணுக்கு இமை போல
பிரியாமல் பிரியமாய் காதலிப்போம் மச்சானேன்னு
காதலுடன் சொல்லிவிட்டேன்.. பாசக்கார தங்கச்சியே...!!!

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (14-Jan-15, 1:46 pm)
பார்வை : 141

மேலே