நாகரீக நகர்வின் பிழை - இராஜ்குமார்

நாகரீக நகர்வின் பிழை
~~~~~~~~~~~~~~~~~~~

'பிரபவ' முதல் 'அட்சய' வரை
வடமொழியில் வழியும்
அறுபது ஆண்டுகளையே
அன்றாடம் அச்சிட்ட ...
அற்ப தாள்களை
அடியோடு கிழிக்காமல் ....

புலவரும் , தமிழரும் , பலரும்
தை முதல் நாளில்
புதுமையோடு புதுப்பித்த
திருவள்ளுவர் ஆண்டினை
தெருவில் எறிவது ஏனோ ..?

அரசியல் ஆடைக்குள்
அழுக்கான அறிக்கைகள் அறிவித்த
சித்திரையே சிறப்பெனும்
ஆரியரின் அடையாளத்தில் ...

தமிழன். ..
தன் தொன்மை தொலைப்பதேனோ ..?
தை முதல் நாளில்
தமிழ்ப் புத்தாண்டில்லையென..

முற்றுப்புள்ளியை
முன்வைத்தாலும்
தை முதல் நாளே
தமிழனின் புத்தாண்டு ...!!

அடுத்தவனின் ஆண்டிலும்
ஆங்கில ஆண்டிலும்
பொங்கி வழியும் உள்ளங்களே ...

பொங்கலே - நம்
புத்தாண்டு என்பதை
புரியாமல் வாழ்வதேனோ ..?

எத்தனை தீர்மானம்
எதிர்த்தாலும்
அத்தனையும் தீயில்
எரிந்துக் கருகட்டும் ...

அத்தீயில்
பொங்கல் புதிதாய்
பொங்கட்டும் ....

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (14-Jan-15, 9:16 pm)
பார்வை : 1256

மேலே