என் பேரு ராஜ பக்சே - மணியன்
தேர்தல் முடிவுகள் வந்த மறுநாள் இலங்கை முன்னால் அ(க)திபர் ராஜபக்சேவின்காதில் விழுந்த பிரபல ஊதா கலர் ரிப்பன் பாடல் இப்படித்தான் கேட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
*-*-*-*-*-*-*
ஐயோ எல்லாம் போச்சே - என்
கையே கண்ணை குத்தியாச்சே . . . .
தையினு பிறந்தா வழியுன்னு சொன்னதாரடா. .
மெய்யுனு தெரிஞ்சும் மனசே நீயும் நம்படா. . .
எல்லாம் இங்கே மாயை - என்
பின்னால வச்சுட்டான் தீயை. . .
இன்னும் எத்தனை பேருக்கு பதில்
நான் சொல்லனும். . . ( அய்யோ )
முள்ளிவாய்க்கால் கதையும் என்னை
முள்ளைப் போல குத்தும் - நான்
அள்ளி விட்ட பொய்யி எல்லாம்
எள்ளி கையை கொட்டும். . .
ஐநா ஒரு கேள்வி கேட்டா - என்
நைனா என்ன செய்வேன் . . . .
தானா இது நடக்குமுன்னு
தெரியாமத்தான் போனேன் . . ( அய்யோ )
என் பிரண்டு ஒருவர் பேரு மோடி - அவர்
எப்பவும் அடிப்பார் பல்டி
பழைய பிரண்டு நம்ம சிங் - இப்போ
வாஷ் பேசின் சிங்க்கு. . .
என்னோட நம்பிக்கை மட்டும்
தமிழ்நாடு அரசியல் கூட்டம். . . அவங்க
செய்யப் போற ட்ராமா மட்டும்
கண்டிப்பா என்னை மீட்கும். . . . .
கண்டிப்பா ளன்னை மீட்கும் . . .
இல்ல எனக்கு கவல
தமிழ்நாடே ளனக்கு சகல. . . .
அங்க ஒவவொரு கட்சியும்
வெவ்வேறா இருந்து என்னை காக்கும். . .
*-*-*-*-*-*-*-*