சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதைப்போட்டி 2015

சாதி !
சாதிகள் இல்லையென்று சாதி !
போதி ...
மதம்மேல் மதம் கொள்ளல்
தொல்லையென்று போதி !

பண்படுத்த வேண்டிய மதம்
புண்படுத்துகிறது
ஒரு புற்று நோயாய்...
எங்கிருந்தோ ஒட்டிவிட்டது
சாதி ஒரு தொழுநோயாய் ...

தீவிர வாதத்தால்
பிரசங்கமும்
தீவிரவாதத்தால்
பீரங்கி உபச்சாரமும் நடத்தும்
இவை இரண்டையும் ஒழி
மனிதனின் மனதை விட்டு அழி !

அன்பின் மொழி பேசு
நற்பண்பில் மதம் பேசு
மனிதம் என்றொரு இனம் பேசு
நீயே கடவுள்
உன் இதயம் கோவில் ...!

சாதிமதமில்லா
புதுஉலகு புகுவிழா
விரைவில் நடத்து ...!


இது என்னுடைய படைப்பு என்பதை உறுதிபட கூறுகிறேன் ...!

த.மலைமன்னன்
21.G முருகன் பாடசாலை தெரு
புனல்வேலி (626111)
விருதுநகர் மாவட்டம்
இந்தியா .

அழைப்பிலக்கம் - 9629951700
9677364647

எழுதியவர் : த .மலைமன்னன் (15-Jan-15, 11:54 pm)
பார்வை : 80

மேலே