உண் மை காதல்
மடந்தையே
உன் இமையில்
என் படுக்கை
வலிக்கிறது
கண்ணிமைத்து
அடிக்காதே உடுக்கை
நீ அழுதால்
நான் அழிவேன்
என் உயிருள்ள வரை
உனக்கு
அழகைப் பொழிவேன்
பெண்ணே
ஆண்களை வேண்டுமானால் அழவை
உன்
கண்களை அழவைக்காதே
நான்
உன்னோடிருக்க..
இப்படிக்கு
உன்
உண்மையுள்ள
கண்மை