எது அழகு

அழகு
ஒரு
அழகான
கண்ணோட்டம் !

ஆண்களின்
அறிவு
அழகு !

வெளிப்படையான
எண்ணங்களும்
அழகு !

அமைதியான
தோற்றம்
அழகு !

ஆனந்தமான
உள்ளமும்
அழகு !

இன்னிசையை
ரசிப்பது
அழகு !

இடுக்கண்களில்
நகைப்பதும்
அழகு !

பருவ
வயது
அழகு !

பருவ வயது
தரும் அனுபவங்களும்
அழகு !

மலரும்
காதல்
அழகு !

மலராத
காதலும்
அழகு !

புன்னகை
அழகு !

புன்னகையில்
கண்ணீரும்
அழகு !


கணவனின்
கோபம்
அழகு !

மனைவியின்
சாந்தமும்
அழகு !


புற அழகை
புறக்கணித்து
அக அழகை
அனுபவித்தால்

எல்லாமே
அழகு தான் !
================கிருபகணேஷ் ======================================

எழுதியவர் : kirupaganesh (17-Jan-15, 8:20 pm)
பார்வை : 1384

மேலே