நீ எங்கே என் -அன்பே ஹர்ஷினி

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை
என் முதலும் முடிவும் நீயாக இருப்பதால்...
என்னை தொலைத்து விட்டு ................

உன் நிழல் தேடிக் கொண்டிருக்கிறேன்
உன் முகம் காணா தூரத்தில் இருந்து....
போதுமடி உன் கண்ணாமூச்சி ..........

நான் ஏற்கனவே தோற்றுவிட்டேன்
உன் முகம் காட்டிவிடு.....
எனக்கு பசிக்குதடி..............

உன் நினைவுகளை தான் தின்று கொண்டிருக்கிறேன்..
இது தீர்ந்து விடாது...
இருந்தும் இது மட்டும் போதாதடி.......

கண்மூடி திறக்கும் போது உன் மடியில் கிடக்க வேண்டும்..
இப்படியே நான் கண்மூடும் வரை இருக்க வேண்டும்.................

எழுதியவர் : ஹர்ஷினி (17-Jan-15, 10:06 pm)
சேர்த்தது : harshini
பார்வை : 223

மேலே