கரா முரா

கரா முரா என்று
உங்கள் பிள்ளைக்குப்
பெயர் வைத்தால் கூட
ஏதாவது ஒரு மொழியில்
கரா முராவிற்கு
ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கும்
அர்த்தம் தெரியாவிட்டால் என்ன
குடியா முழுகிவிடும் ?
நமக்குத் தேவை புதுமையும்
உச்சரிக்க முடியாத ஓசையும் தான்
இது தான் தற்காலத் "டமிலர்"களின்
பண்பாடு.