ஊர்விட்டு நாடோடி ஓடிவந்த தழிழா

ஊர்விட்டு நாடோடி ஓடிவந்த தழிழா
வேதனையில் வாட்டும் கீதம் கேட்ட தமிழா
சீதனங்கள் தேடும் மோகமோ தமிழா
பாவனைகள் ஓடிய காலமோ தமிழா
பாசங்கள் போனதே விலைக்குமே தமிழா
முன்னேற்ற பாதைகளில் முட்களோ தமிழா
முயற்சியின் விற்களில் கற்களோ தமிழா
வெற்றி கொண்டவர்கள் எத்தனையோ தமிழா
மற்றவர்கள் வாழ்வு கற்பனையோ தமிழா
சுற்றார்கள் சூழ்திட மற்போரோ தமிழா
குற்றுயிராய் வாழ்கின்ற அற்பமொதமிழா

வெளிநாடு சென்று வேரறுந்த பெருமரங்கள் எத்தனையோ -அவர்
துளிநேரம் வாழ பெரியோர்கள் செய்த வழிமுறைதான் எத்தனையோ
சாதி சனமில்லை -அவர் தலைமுறைகள் கண்ட நிலையென்ன
நிற்பதற்கு இடமில்லை கற்றறிய பதமில்லை உற்றாரும் உடனில்லை- அவர்
பிற்ப்போக்கில் பிறழ்ந்து தெற்றுக்கள் பல கற்றிடுவார்-அவரை
கட்டித்தான் வாழ உத்தமிகளில்லை கொட்டித்தான் மேளம் தாலி கட்டுவார்ரில்லை
இக்கரைக்கு அக்கறை பச்சையாம் இச்சைகேல்லாம் பட்டுடித்தி
நர்த்தனமிட்டு நாடுவிட்டு நாடு சென்ற நல்லவர்
பேர்கேட்டு போய்விட்டார் வாய்விட்டு கூறவும்
வார்த்தையில்லை தாய் நாடே திரும்ப அழை உன் தலைமுறைகளை.

எழுதியவர் : பிரியா (18-Jan-15, 2:16 pm)
பார்வை : 1959

மேலே