--என் அன்னை இட்ட பொங்கல்--

நீல வண்ணம் ஏற்றி,
உயிரின அரிசி இட்டு,
வெண்மேக கொடி சுற்றி,
நீலக்கடல் உலைநீர் ஊற்றி,
செங்கதிர் அனல் பூட்டி,
பொங்கு பனி நிறைந்த இவ்வுலகம்
போல் பொங்கியது
என் அன்னை அமைத்த
பொங்கல் பானை...!

மழலை ஆக மாட்டல்
மண் தாய்,
என நம்பிக்கையுடன் சுத்தம் செய்தல்
என் தாய் அறுவடை கருவிகளை
அடுத்த அறுவை சிகிச்சைக்கு..!

கால்நடையில் கைநடை
புரிந்தால் காவி
நிறம் தீட்டி...!

பெற்ற பிள்ளை
என் பசி போக்கும் முன்
நம் பசி போக்கிய
கால்நடைக்கும்
செங்கதிர்க்குடைக்கும்
நெய் பொங்கல் இட்டு
வேளான்மையுளும்
வெல்லா தாய்மை உள்ளத்தை
காட்டினாள்
என் அன்னை....!

எழுதியவர் : விகடகவி விக்னேஷ் (19-Jan-15, 3:56 pm)
பார்வை : 1342

மேலே