Priya Mam
அரவணைப்பின் அன்னை!
அன்பே உங்கள் பெயர்!
அறிவே உங்கள் போஜனம்!
திட்டக் கூட தெரியாது
உங்களுக்கு, திட்டவே தெரியாது!
குட்டி முத்தம் வைக்கவா,
உங்கள் குட்டி சிரிப்பிற்கு!
உங்கள் விரல் என் மீது
பட்டதும் தாயின் ஸ்பரிசத்தை கண்டேன்!
சில சந்தர்ப சூழ்நிலைகள்
நான் உங்களை வருத்தப்படும் படியாக
மாற்றிவிட்டது,என்னை மன்னித்திடுங்கள்!
செய்கையில் என் சகோதரி,
எங்களுக்காக உங்களை
அர்ப்பணித்தீர்!
துன்பத்தை பகிரும் பொழுது
தோழி நீ!
Sorry கேட்பதை விட
சரிசெய்வதே உங்களுக்கு பிடிக்கும்!
தெரியாது,முடியாது வார்த்தை
உங்கள் அகராதியில் கிடையாது!
சோகத்தை மறைத்தீர் உங்களுள்!
அறிவை புகுத்தினீர் எங்களுள்!
தவறு செய்த என்னை திருத்திக்கொள் என்றீர்!
திருத்திக் கொண்டமைக்கு நான் சொல்ல வேண்டிய
நன்றியை நீங்கள் சொன்னீர்!
(உண்மையிலே நீங்க Great Mam).
உண்மையான பாசம்,
உரிமையான பேச்சு,
முகமூடி இல்லா முகம் உங்களுக்கு!
எங்களின் வெற்றி உங்களுக்கே! (சமர்ப்பணம்) ...
அதிர்ஷ்டம் கொடுத்த வரம் நீ!
கூட்டத்தில் கண்கள் அலை மோதும் ,
பொழுதும்
தனியாய் தெரிந்தீர்,
வெகுளித்தனத்தின் மொத்த உருவமாய்!...
P - Perfect
R - Reach
I - Innocent
Y - Young
A - Achieve
உங்கள் தேடல்
அது வேறு!
என் வாழ்க்கை
பாதையில்
நீங்களும்
ஓர் அங்கம்
என்பதை
பெருமையுடன்
கூறுவேன்!