வானம் ஒன்று வாழ்க்கை ஒன்று

மாலை வானம் பூப்படைய
பறவைகள் வாழ்த்துச் சொல்ல
கதிரவன் தலை குனிந்து
வெட்கப்பட்டானோ !

இரவு வானம் ஒளி வீச
வெண்ணிலா சிறகடிக்க
நட்சத்திரம் கோலம் போட்டு
அழகு கூட்டியதோ !

காலை வானம் தலை காட்ட
கதிரவன் புது உலகம் காண
பறவைகளும் பூக்களும்
புத்துயிர் கொண்டனவோ !

பகல் வானம் உலகை சுட
உலகம் சோர்வில் விழ
எங்கிருந்தோ வந்த மழை
குளிர்மை தந்ததோ !

வானம் ஒன்று
அதை பார்க்கும் கோணம்
பல உண்டு

வாழ்க்கை ஒன்று
அதை கையாளும் முறையில்
மாற்றம் உண்டு

எழுதியவர் : fasrina (20-Jan-15, 9:10 am)
பார்வை : 346

மேலே