வழிகாட்டிகள்

எங்களுக்கு சினிமாவே
எல்லாம் என்று ஆனபின்
வழிப்பாட்டுத் தலங்களுக்கும்
வழிகாட்டிகள் நடிகர்களே
நம்பியாரின் பக்தியால்
சபரிமலையை அறிந்தோம்
எம்.ஜி.ஆர் சென்றுவந்த பின்தான்
மூகம்பிகை தெய்வத்தின்
ஆலயம் உள்ள ஊர் அறிந்தோம்
தமிழகத்தில் பிறந்த
ராகவேந்திர சுவாமிகளை
மாராட்டிய கன்னட
தமிழ் நடிகரால்
அறிந்து கொண்டோம்
புண்ணியத் தலங்களுக்கும்
வழிகாட்டும் புண்ணியவான்கள்
நடிகர்கள் மட்டுமே.
------------
மேலே சொல்லப்பட்டது தற்கால வரலாறு. இது தவறு என்று யாரேனும் சொன்னால் விலக்கிவிடுகிறேன். .