காற்றில் கலந்த கவிதைகள்

காற்றில் கலந்த கவிதைகள் ..
வெண்டுறை ..
புனைந்த கவிதைகள் எடுத்து வைத்தேன்
புத்தக வடிவம் கொடுத்திட வேண்டி
ஆடிக் காற்று அறைக்குள் நுழைய
பறந்தன காகிதம் எங்கும்
பிடித்து மீண்டும் எடுத்து வைக்க
முயன்ற போது திறந்த ஜன்னல்
வழியே கவிதை பறந்து செல்ல
பொறுமை இழந்து நின்றேன்