எந்திரப்பாம்பில் - சந்தோஷ்

தண்டவாளத்தில்
ஊர்ந்து செல்லும்
எந்திர பாம்பில்
இயந்திரமாய்.. இயல்பை
தொலைத்து
இருக்கையில் நான்
முன் பதிவு செய்தவனாய்..!

தலையில் சுமையை வைத்து
சுமையை விற்பனைக்கு கொடுத்து
கூவிக்கொண்டிருந்தவளிடம்
ஈர சிரிப்பினால் வழிந்தேன்.
பதிலுக்கு
மல்லி பல்லை கொட்டியவளிடம்
மனம் சஞ்சலப்பட்டாலும்
அவள்
கரத்தின் கருப்பில்
காதல் அருவெறுத்தேன்.

அவளோ
நாசூக்காக வெட்டி விற்றாள்
”ஜாதி” மல்லிப்பூவை..!

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (20-Jan-15, 10:33 pm)
பார்வை : 217

மேலே