சென்னை புத்தக கண்காட்சியில்

கடல் போல் புத்தகங்கள்….!
காட்சியாய் வளாகங்கள்….!
காணக்கண்கோடி வேண்டும்….!
அள்ளிசெல்ல இரு கைகள் போதாது….!
வாசிக்க வானம்போல் கண்கள் வேண்டும்….!

பூமியில் சேகரித்து
புதைந்துள்ள அறிவை…!
புத்தகத்தில் பதித்து
புது உலகம் படைக்கின்றான்
புதுமை எழுத்தாளன்….!

அனுபவங்களை ஆற்றலாய்…..!
அதிசியங்களை ஆர்வமாய்…..!
கனவுகளை கற்பனையாய்…..!
காலத்தை பிரதிபலிக்கும் பிம்பமாய்….!
எழுத்துக்களால்……!
எழுதுகோலினால்…..!
எழுச்சியுடன்……!

காகிதத்தில் பதித்து
படைத்த படையல்களே
புத்தகங்கள்.…!

வானளாவிய புத்தக தோட்டத்தில்….!
வாசகர்கள் வண்டுபோல் மொய்த்து…..!
வாசனையாய் தலைப்புகளை நுகர்ந்து…..!
வாழ்க்கை தரம் மேம்பட…..!
அங்குமிங்குமாய் திரிந்து
அள்ளிச்சென்றனர் புத்தகங்களை
ஆர்வமாய்……!

தமிழ் அன்னை கருவிலிருந்து……!
காவியமாய், கட்டுரையாய்…..!
கவிதையாய், கதையாய்…..!
பெற்றெடுத்த படைப்புகள்யாவும்……!
புத்தகவடிவிலே
பெட்டகமாய்…..!
பொக்கிஷமாய்…..!
தமிழுக்கு போர்ப்படையின் தளபதியாய்…..!
தரணியில் தத்துவமாய்…..!
தமிழ் அன்னைக்கு அணிகலனாய்…..!
அலமாரியில் அணிதிரண்டு
அலங்கரித்து வீற்றிருந்தன
அளவிடா அதிசியமாய்…..!

வாசிக்கும் பழக்கம் மேம்பட…..!
யாரிடமும் யாசகம் கேளாய்……!
இணையதள தாக்கத்தையும்
இமயமாய் எதிர்த்து நின்று….!
கடல் போல் குவிந்த
புத்தக அலையின் மேல்
படகுபோல் பயணம் செய்து….!
புத்தகங்களை சுவாசம் செய்த
வாசகர்களே சாட்சி.

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (20-Jan-15, 11:04 pm)
பார்வை : 61

மேலே