தேர்தல் பிரச்சாரம்
யாரய்யா அந்த ஆளு தெனம் கோயிலுக்கு வந்து அங்கப்பிரதடசணம் பண்ணி உருண்டு பொரண்டு வர்றாரு?
அவரு ஒரு சுயேச்சை வேட்பாளர்.சிறந்த பக்திமான். வேட்பு மனுத்தாக்கல் செய்த நாள்லேருந்து இதத்தான் அவரு செயயறாரு. கடவுள் எப்படியம் தன்னை ஜெயிக்கவச்சிருவாருன்னு நம்பறாரு.
ஆமாய்யா சில பெரிய கட்சித் தலமையே தோட்டம் காடு மேடெல்லாம் ஹோமம் பூசையெல்லாம் பண்ணித்தான் ஜெயிக்கறாங்க. இவரும் அந்த வேலையைத்தான் செய்யறாரு. கண்டிப்பா ஜெயிப்பாரு.