அடியே உன்னால்

குளத்தில்
கல்லெறிந்து விளையாடும்
சிறுவர்களைப்போல

உன் புன்னகையை
என்மீது எறிந்துவிட்டு
போகிறாய்

சற்றுநேரத்தில்
குளம் தெளிந்துவிடும்

நான் அப்படியா?
குழம்பிய
குட்டையாகி விட்டேன்
அடியே உன்னால்.

* ஞானசித்தன் *
95000 68743

எழுதியவர் : ஞானசித்தன் (21-Jan-15, 7:31 pm)
சேர்த்தது : ஞானசித்தன்
Tanglish : adiye unnaal
பார்வை : 57

மேலே