ஆசை

ஆசை
சாலையிலே
அவளுடன் சேர்ந்து
நடக்க ஆசை,
நாள் பூரா அவளோடு
பேச ஆசை,
ஆலமரத்தினிலே கயிறு
கட்டி ஊஞ்சலாடும்
விழியழகியை என்
கையில் தூக்கி
நடக்க ஆசை,
அவள் பருத்திப்பூ
கை விரல்களுக்கு
மருதாணிப்பூ வைத்து
விட ஆசை
அவள் கைக்குட்டையில்
முத்தம் கொடுக்க ஆசை,
அவள் புன்னகையில்
இன்பம் தந்த கண்ணிராக
இருக்க ஆசை,
சோறுட்டி மடி தூங்க
ஆசை, அவளோடு வாழ
ஆசை, எம் பிள்ளைகளை
ஓடக்கரையில் துரத்தி
விளையாட ஆசை,
மரணத்திலும் அவளோடு
பயணிக்க ஆசை!ஆசை!!