அருகாமை

முடிக்கவேண்டிய நேற்றைய அலுவலக வேலை
நண்பனிடம் கைமாற்றாக வாங்கி இருந்த கடன்தொகை
வெளியுலக நடவடிக்கைகள்
எப்போதும் எரிச்சலூட்டுகிற வாகனங்களின் சப்தம்
இவையனைத்தும் மறந்து
உல்லாச உலகில் பரிணமிக்கிறேன்
ஆசை காதலியின் அருகாமையில்...